பதிவு செய்த நாள்
13
ஆக
2020
04:08
வீரபாண்டி: கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் வீரபக்த ஆஞ்சநேயர், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த, 10 முதல் சென்றாய பெருமாள் கோவிலில் அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கிருஷ்ண ஜென்மாஷ்டமியான நேற்று, மூலவர் சென்றாய பெருமாள், வீரபக்த ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சார்த்தி பூஜை செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின், வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேயரை தரிசித்த பக்தர்கள், பரவசத்துடன் ஜெய் ஸ்ரீராம் என, கோஷம் எழுப்பி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.* சேலத்தில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்தும், பலகாரங்கள் செய்து படைத்து, பூஜை செய்து கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடினர். ஊடரங்கு அமலில் உள்ளதால், உறியடி உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.