சாத்தூர்: இருக்கன்குடி கோயில் வரும் பஸ்கள் , பஸ்டாப்பில் பக்தர்களை இறக்காததால், பாதிக்கின்றனர்.சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வாரம்தோறும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். பக்தர்களை ரோட்டிலே இறக்கி விடுவதால் பாதிக்கின்றனர். ஊரின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பஸ் ஸ்டாப்கள் இருந்த போதும்,பஸ்கள் ஸ்டாப்பில் நிறுத்தப்படுவதில்லை. பக்தர்கள் பஸ்சில் இடம் பிடிப்பதற்கு சிரமப்படுகின்றனர். பஸ்களை உரிய இடத்தில் நிறுத்தி, பயணிகளை இறக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்