பதிவு செய்த நாள்
18
ஆக
2020
09:08
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் விநாயகர் சதுர்த்தி விழா, யூ டியுப்பில் ஒளிபரப்பு செய்யப்படும் என, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் நகரின் மையத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, 10 நாட்கள் விமரிசையாக நடத்தப்படும். நடப்பாண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் உற்சவங்கள் நடக்கவுள்ளது. இதை பக்தர்கள், தங்கள் வீடுகளில் இருந்தே தரிசனம் செய்யும் வகையில் வரும், 22ல் விநாயகர் சதுர்த்தி அன்று, மூலவருக்கு நடக்கும் அபி ?ஷகம், தங்கக்கவசம் சாத்துப்படி, உற்சவங்களை சேலத்து தெய்வங்கள் என்ற (SALEM GOD) யூ டியுப் மற்றும் முகநூல் வாயிலாக காலை, 11:00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். வரும், 24ல் இரவு, 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் ஒளிபரப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.