கொரோனா குறைய சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2020 09:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சஞ்சீவிஆஞ்சநேயர் கோயிலில் கொரோனா நோய் தாக்கத்தை குறைத்து மக்களை காக்க வேண்டி யாகபூஜை நடந்தது. ஆவணி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் பேராக்கண்மாய் அய்யப்பன் கோயிலில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதியில் கணபதிபூஜையுடன் சிறப்பு யாகபூஜை நடந்தது. பால், பன்னீர், பழங்கள்உட்பட 13 பொருட்களால் அபிஷேகம் செய்து, வடை மாலை சாத்தி, சர்வ அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு தீபாராதனை நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.