உடுமலை: உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில், பூரம் நட்சத்திரம் சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், நேற்று, பூரம் நட்சத்திரம் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், உட்பட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. பச்சை பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு, வழிபட்டனர்.