பதிவு செய்த நாள்
21
ஆக
2020
02:08
மதுரை; தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, துாத்துக்குடி வழக்கறிஞர் ராமசாமி, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, தடை விதித்தது, ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. தகுந்த வழிகாட்டுதல்களுடன், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவு:தற்போது இயல்பான சூழ்நிலை நிலவவில்லை. கொரோனா தடுப்பு ஊரடங்கால், மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழா உட்பட பாரம்பரிய முக்கிய விழாக்கள், இம்முறை நடக்கவில்லை. மக்கள் நலன் கருதி, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டது.