உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் விநாயகருக்குரியது மூலாதாரம்! விநாயகரை அருகம்புல்லால் பூஜிக்க உகந்த நாள் அஷ்டமி! உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது! விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழு முதற் கடவுளாக மாற்றியவர்கள்- குப்தர்கள். திருவரங்கத் திருமாலின் ஏகாந்த நித்திரைக் கோலத்தை முதன் முதலில் தொழுதவர்கள் கணபதியும், அகத்தியரும்! மதுரைத் திருத்தலம் அருகிலுள்ள திருபுவனத்தில் தேங்காய் பிள்ளையார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவரின் இயற்பெயர் விசாலாட்சி விநாயகர்! பதினொரு விநாயகர்கள் உள்ள திருத்தலம் திருப்பாசூர்! இவர்கள் வாசீஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் உள்ளனர். திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகருக்கு, நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர்! ÷ஷாடச (பதினாறு) விநாயகர்களில் முதலாமானவர் பால கணபதி! விநாயகர் வழிபாடு தமிழருக்கு உரியதென மறைமலையடிகள் குறிப்பிடுகிறார். கி.மு 6-ஆம் நூற்றாண்டு நூலான தத்ரேய ஆரண்யத்தில் யானைக் கொம்புடைய இறைவன் எனக் குறிக்கப்படும் கடவுள், விநாயகர்!