நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:00 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கப்பட்டது. பாலபிரஜாதிபதி அடிகள் கொடியேற்றினார். மதியம் 12.00 மணிக்கு வடக்கு வாசலில் பூஜையும், மாலை 6.00 மணிக்கு அய்யாவுக்கு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து எல்லா நாட்களிலும் பூஜை, அன்னாதானம் நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெறுகிறது. ஆக., 31-ம் தேதி 11-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடக்கிறது.