Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

தனுசு: கனவு நனவாகும் தனுசு: கனவு நனவாகும் கும்பம்: சொத்து சேரும் கும்பம்: சொத்து சேரும்
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)
மகரம்: செல்வாக்கு உயரும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
17:21

கேது ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கும், ராகு 5ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். ராகு நற்பலன் அதிகம்  தருவார். சிந்தனைத்திறன் கூடும். மனதில் உள்ள கற்பனைக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். கனவு நனவாகும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.  விரக்தியை விரட்டி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயம் இல்லாமல் தைரியத்துடன் பணியாற்றுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். பிறருக்கு சொல்லும் ஆலோசனைகள் வெற்றி பெறும். கும்பாபிஷேகம், மக்கள் சேவை என சேவையில் ஈடுபட்டு செல்வாக்குடன் திகழ்வீர்கள்.  

குடும்பம்: ராகுவால் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். சிலர் தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புண்டு. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் பிரிவினையால் வருந்துவர். பிள்ளைகளின் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் நலனுக்காக தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள்.

நிதி நிலை : பணவிஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். அசையா சொத்து சேரும் வாய்ப்புண்டு.  பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் மறையும். பாகப்பிரிவினை முடிவுக்கு வரும். அநாவசிய செலவு குறையும். அதே நேரம் கேது தான தர்மம் செய்ய  வைத்து நற்பெயரை உண்டாக்குவார்.

தொழில்: எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது சிரமம் என்றாலும் தொழில் ரீதியான பயணம் வளர்ச்சி தரும்.  கூட்டுத்தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்கில் கவனமுடன் இருப்பது அவசியம். மளிகை, கமிஷன், ஏஜன்சி, தரகு, உணவுப்பொருள் விற்பனை தொழில்கள் ஏற்றம் பெறும். பணியில் எதிர்பாராத பயணம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் தனித்திறமையால் முக்கியத்துவம் பெறுவர். அதிகாரிகள் செய்யும் தவறைக் கூட சரி செய்து நிறுவனத்திற்கு நற்பெயர் வாங்கித் தருவீர்கள். சகபணியாளரை அனுசரிப்பது அவசியம். ஆட்டோமொபைல்,  பிரிண்ட்டிங், பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் பெறுவர். . அயல்நாட்டுப் பணிக்கான வாய்ப்பு தேடி வரும்.

பெண்கள்: குடும்ப பிரச்னை தீர குலதெய்வ வழிபாடு அவசியம். அக்கம்பக்கத்தினரால் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகளின் மனநிலையை கண்காணிப்பது அவசியம். குடும்ப முன்னேற்றத்தில் உங்களின் பங்கு சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள்: படிப்பில் ஏற்ற, இறக்கத்தை சந்திக்க நேரிடலாம். ஆனால் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மருத்துவத்துறை மாணவர்கள் வளர்ச்சி காண்பர்.

உடல்நிலை: தீவிர சிந்தனையால் மனத்தளர்ச்சி ஏற்படலாம்.  கை, கால், மூட்டு, பல்வலியால் அவதிப்படலாம். சிலர் தொற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்புண்டு.

பரிகாரம்:
* சனிக்கிழமையில் அனுமனுக்கு துளசிமாலை
* தினமும் மாலை சுந்தர காண்டம் பாராயணம்
* அமாவாசையன்று ஏழைகளுக்கு அன்ன தானம்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) »
temple
ராசிக்கு 2ம் இடம் வரும் ராகுவால் லாபம், எட்டில் இணையும் கேதுவால் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். இதுவரை ... மேலும்
 
temple
ராகு, கேதுவால் சரிசம பங்கு பலன் கிடைக்கும். வாழ்வில் பல மாறுதல் ஏற்படும். 2ம் இடத்தில் இருந்த ராகு ... மேலும்
 
temple
செப்.1 முதல் ராகு 12ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராசியில் இருந்து ராகு விலகுவது நிம்மதி தரும். இதுவரை ... மேலும்
 
temple
செப். 1 முதல் ராகு கேதுப் பெயர்ச்சியால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 11ம் இடத்தில் ராகுவும், 5ம் இடத்தில் ... மேலும்
 
temple
ராசிக்கு 11ல் இருந்த ராகு செப்1 முதல் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் பணிச்சுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.