இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2020 12:08
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.