நாளை துார்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி, லட்சுமி ஆவாஹனம், லட்சுமி விரதம் ஆரம்பம். ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துார்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்கிறது வேதம்.
காலையில் பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு, விளக்கேற்றி, சுத்தமான இடத்தில் அருகம்புல் பறித்து வீட்டில் ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கலாம் அல்லது பலகையின்மேல் அருகம்புல்லை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு வழிபட வேண்டும். பலகையின் மேல் நமக்கு இஷ்ட தெய்வத்தை வைத்து பூஜிக்கலாம். மகாலட்சுமிக்கு தாமரை மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் நீண்ட ஆயுள், புத்திர பாக்கியம், நினைத்த காரியங்கள் கைகூடும்.