கிணத்துக்கடவு: நெகமத்தில் பழமையான, நித்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன.
கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, 65.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புனரமைப்பு பணிக்கு கடந்த மாதம் ஆலோசணை கூட்டம் நடந்தது.இதனை தொடர்ந்து, கோவில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று, திருப்பணிக்கான பூஜையை துவக்கி வைத்தார்.இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையாளர் செந்தில்வேலவன், செயல் அலுவலர் வனிதா, நெகமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமசுந்தரம், கிணத்துக்கடவு ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் துரைசாமி மற்றும் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.