பாலக்காடு: கொரோனா என்ற கொடூர வைரஸ் பரவுவது தொடர்வதின் இடையே உலகெங்குமுள்ள மலையாளிகள் ஓணம் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் உள்ளன. ஆனால் இந்த ஓணம் எச்சரிக்கையாக சமூக இடைவெளி பின்பற்றி கொண்டாட வேண்டும் என்று ஞாபகப்படுத்துகின்றன. சுகாதாரத் துறையின் பிரேக் தி செயின் விழிப்புணர்வின் பாகமாக அமைத்த கொரோனா கால இந்த சிறப்பு திருவாதிரைக்களி நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளன. நடனத்திற்கான பாடலை எழுதியது சுகாதாரத்துறையில் நின்று ஓய்வுபெற்ற ஹெல்த் சூப்பர்வைசர் விமல் குமாராகும். நத்ந்தனா சிபு பாடியுள்ளார். குத்தாம்புள்ளி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கதீஜாவின் உதவியுடன் ஊழியர்கள் நடனமாடினர். புகழ்பெற்ற திருச்சூர் பூரம் நடக்கும் வடக்குநாதர் கோவிலின் தெற்கு கோபுர நடையில் வைத்து போலீசாரின் உதவியுடன் முற்றிலும் சமூக இடைவெளி பின்பற்றி மகாபலி மன்னரின் இருப்பில் முக கவசம் அணிந்து திருவாதிரைக்களி நடனம் நடைபெற்றன.