ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இன்று திறக்கப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குள், புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மார்ச், 25 முதல் தமிழக கோவில்கள் மூடப்பட்டன. இன்று காலை, 4:00 மணிக்கு ராமேஸ்வரம் கோவில் நடை திறந்து ஸ்படிகலிங்க, கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் காலை, 6:00 மணியில் இருந்து கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அதே நேரம், பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்களில், புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.