இம்மையிலும் நன்மை தருவார் கோயில் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2020 02:09
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 165 நாட்களுக்குப் பின்பு இன்று(செப்.,1) பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில், கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, தினமும் 6 கால பூஜை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், ஐந்து மாதங்களாக பூட்டப்பட்டிருந்த ஹிந்து கோயில்களை திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு, இன்று(செப்.,1) பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.