குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, புருஷோத்தம பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு விழா நடந்தது. குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. சிறப்பு யாகங்கள், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் சிறப்பு பஜனை நடந்தது.