பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தி பரவசத்துடன் பக்தர்கள், நேற்று தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று பரவலால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஆறு மாதத்துக்குப் பிறகு, நேற்று நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி தரப்பட்டது. காலை, 6:30 மணி முதலே, பக்தர்கள் சமூக இடைவெளியுடன், தரிசனம் செய்தனர். ஆறு மாதத்துக்கு பிறகான தரிசனம் என்பதால், பெரும்பாலானோர் பக்தி பரசவம் அடைந்தனர். ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்று, மூலவரை தரிசனம் செய்த பின், அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்து, திருமஞ்சன கோபுரம் வழியாக, பக்தர்கள் வெளியேறினர். இதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள, ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும், பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று பவுர்ணமி தினமாகும். ஆனால், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கிரிவலப்பாதை முழுவதும், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.