பதிவு செய்த நாள்
03
செப்
2020
02:09
தர்மபுரி: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.
ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, தர்மபுரி கடை வீதி மருதவானேஸ்வரர் கோவிலில் நேற்று, சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக ஆலயத்தில், ராகு மற்றும் கேது பகவான் சிலைகளுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி?ஷேகங்கள் செய்யப்பட்டன. முன்னதாக, இக்கோவில் வளாகத்தில் உள்ள யாக சாலையில், ராகு, கேது மற்றும் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு யாகம் செய்யப்பட்டது. இதேபோல், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், செந்தில் நகர் சித்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், ராகு, கேதுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக பூஜை நடந்தன.