பதிவு செய்த நாள்
04
செப்
2020
12:09
வீரபாண்டி: பெருமாள் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்கு, மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சேலம், காகாபாளையம் அருகே, ராக்கிப்பட்டியில், சென்றாய பெருமாள் மலைக்கோவில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ள கோவிலில், தினமும் பக்தர்கள் ஏறி, தரிசனம் செய்து வந்தனர். ஆனால், வெயில், மழைக்காலங்களில், பக்தர்கள் படியேற சிரமப்பட்டனர். இதை தவிர்க்க, சிலரது உதவியுடன், கொரோனா ஊரடங்கு காலத்திலேயே பணி தொடங்கி முடிந்துவிட்டது. கடந்த, 1 முதல், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த கோவிலில், இன்று, பரிகார யாகம் செய்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க உள்ளதாக, நிர்வாகிகள் கூறினர்.