பழநி கோயில் தரிசனத்திற்கு தொலைபேசியிலும் முன்பதிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2020 09:09
பழநி, :பழநி மலைக்கோயில் செல்வதற்கு இணையதள வசதி இல்லாதவர்கள், தொலைபேசியிலும் முன்பதிவு செய்யலாம். நேற்று முதல் கோயில் அபிேஷக பஞ்சாமிர்த விற்பனையும் துவங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் மலைக்கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் செப். 1 முதல் www.tnhrce.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து தரிசித்து வருகின்றனர். இவ்வசதி இல்லாத பகுதியினர் 04545 - 242683 என்ற எண்ணில் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண்ணை பதிவு செய்து அனுமதி பெறலாம்.தரிசனத்திற்கு முதல் நாள் காலை10:00 முதல் மதியம் 1: 00 மணி வரையிலும், 2.00 முதல் மாலை 6.00 மணி வரையிலும் முன்பதிவு செய்யலாம். வரும்போது கட்டாயம்ஆதார் கார்டை கொண்டு வரவேண்டும்.நேற்று (செப்.,4) முதல் மலைக்கோயிலில் அபிேஷக பஞ்சாமிர்தம் உட்பட பிரசாத பொருட்கள் விற்பனை துவங்கியது. சுவாமி தரிசனத்திற்கு காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், என பழநி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.