பதிவு செய்த நாள்
05
செப்
2020
09:09
மைசூரு:மைசூரு தசரா விழா ஏற்பாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, தலைமையில், வரும் 8 ல், உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மைசூரு தசரா விழா ஏற்பாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, தலைமையில் உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இக்கமிட்டியில், துணை முதல்வர்கள், அமைச்சர்கள், மைசூரு மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.இக்கமிட்டி, பெங்களூரு விதான் சவுதாவில், வரும் 8 ல், முதல் கூட்டம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவி வருவதால், பாரம்பரியத்தை மறக்காமல் எளிய முறையில் நடத்துவதாக, முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தார். விதிமுறைகள், நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.இந்தாண்டு, அக்., 17 முதல் 26 வரைல தசரா விழா கொண்டாடப்படுகிறது. நிறைவு நாளில், ஜம்பு சவாரி நடக்கிறது.