பதிவு செய்த நாள்
07
செப்
2020
11:09
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பவித்ரோத்ஸவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த, 4ம் தேதி பவித்ரோத்ஸவம் துவங்கியது. அன்று இரவு, 7:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் புறப்பட்ட நம்பெருமாள், நெல்லளவு கண்டருளினார். நேற்று காலை, 8:15 மணிக்கு, பரமபதவாசல் அருகே உள்ள சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள், பவித்ர மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, நேற்று காலை, 9:30 மணிக்கு மேல், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, ரெங்கநாதரை தரிசித்தனர்.