திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2020 04:09
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால், திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கொரோனா பரவலால் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள், செப்.1ம் தேதி நடை திறக்கப்பட்டது. சனிக்கிழமையான இன்று பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.