ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையான நேற்று நீராட தடை விதித்ததால் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று மகாளய புரட்டாசி அமாவாசையொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். முன்னோர் நினைவாக திதி, தர்பணம் பூஜை, அக்னி தீர்த்த கடலில் நீராட தடை விதித்து, பக்தர்கள் செல்லும் வழியில் போலீசார் தடுப்பு அமைத்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இருப்பினும் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ராமர் கோயிலுக்கு தடை: தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வாகனத்தில் சென்றனர்.ஆனால் போலீசார் சோதனை சாவடியில் தடுத்து வாகனங்களை திருப்பி அனுப்பியதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.