பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
மொடக்குறிச்சி: கொடுமுடி யூனியன், வடக்குமூர்த்தி பாளையம் நடுக்காட்டு தோட்டத்தில், வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை மற்றும் முருகனுக்கு உகந்த நாளான ஷஷ்டி, செவ்வாய் கிழமையில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று, மகாளய அமாவாசையன்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதுடன், வெற்றிவேல் முருகனுக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களில், பலவிதமான சிறப்பு அபி ?ஷகங்கள் செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது.