திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2020 07:09
திருப்பதி: திருப்பதி, திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், திருமலையில் குவிந்த வண்ணம் இருப்பர். கொரோனா வைரஸ் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, நடப்பாண்டு பிரம்மோற்சவம், ஏகாந்தோற்சவமாக தனிமையில் நடக்க உள்ளது. இன்று திருமலையில், கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குவதை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது .
பிரம்மோற்சவ விழாவின் ஒன்பது நாட்களிலும் சீனிவாசப்பெருமாள் சர்வ அலங்காரத்தில் விதவிதமான நகைகள் அணிந்து மாடவீதிகளில் வலம் வருவார் பக்தர்கள் தரிசிப்பர். இந்த வருடம் கொரோனா காரணமாக கோவிலுக்குள்ளேயே பிரம்மோற்சவ விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் பார்க்கவோ பங்கேற்கவோ முடியாது கோவிலின் அதிகாரபூர்வமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) https://www.youtube.com/user/SVBCTTD நேரலையில் அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும்.