பதிவு செய்த நாள்
19
செப்
2020
07:09
டேராடூன்: உத்தரகண்டில், அடுத்த ஆண்டு நடைபெறும், ஹரித்வார் கும்பமேளாவில், கொரோனா பாதிப்பால் பக்தர்கள் பங்கேற்பதை குறைக்க, அனுமதிச்சீட்டு முறை கொண்டு வரப்படும் என, அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், கூறினார்.
உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில் அடுத்த ஆண்டு கும்பமேளா நடைபெற உள்ளது. இதில், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அடுத்த ஆண்டு நடைபெறும் ஹரித்வார் கும்பமேளா நிகழ்ச்சியில், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.இதற்காக, அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும். கும்பமேளாவில் பங்கேற்போருக்கு, அனுமதிச்சீட்டு வழங்குவது, இதுவே முதல் முறை. இவ்வாறு, அவர் கூறினார்.