பதிவு செய்த நாள்
19
செப்
2020
04:09
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா பரவலைத் தடுக்கும் வசதிகளோடு, பெருமாள் கோயில்களில் வழிபாடு நடக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்பில் உள்ளனர். புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். சனிக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும்.திண்டுக்கல், பழநி, தாடிக்கொம்பு, குஜிலியம்பாறை, வடமதுரை, ரெட்டியார்சத்திரம் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இங்கு மாவட்ட மற்றும் கோயில் நிர்வாகங்கள் கொரோனா தடுப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ் கூறியதாவது: இறைவழிபாடுக்கு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கக் கூடாது. முக்கிய கோயில்களில் முன்னெச்சரிக்கையாக தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுக்கலாம். சமூக இடைவெளி, கிருமிநாசினி, உடல் வெப்பநிலை சோதித்தல் போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்கள் வருகைக்கேஏற்ப நிபந்தனைகளை விதிக்க வேண்டும், என்றார்.