புரட்டாசி சனி: காரைக்குடி பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2020 03:09
காரைக்குடி : அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில்,புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
‛தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்கார ஆராதனை நடக்கும். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 4:00 மணிக்கு சுப்பிரபாதம், காலசந்தி பூஜை நடைபெற்று காலை 5:30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் தங்க அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கோயில்கள் அனைத்திலும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் ராம அழகம்மை ஆச்சி செய்திருந்தனர்.
திருப்புத்துார்: கொங்கரத்தி வண்புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மூலவருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்துஉத்ஸவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் சர்வ அலங்காரத்தில் மூலவர் சன்னதி முன்பாக அருள்பாலித்தார். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பக்தர்கள் தரிசித்து சென்றனர்.திருப்புத்துார் ஸ்ரீதேவி பூதேவி சமேத நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு காலை 6:00 மணிக்கு அபிேஷக,ஆராதனை நடந்து நின்ற கோலத்தில் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவரை பக்தர்கள் தரிசித்தனர்.திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் காலை 6:00 மணி முதல் பக்தர்கள் வருகை துவங்கியது.
காலை 7:00 மணிக்கு மூலவர் சன்னதியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பங்கேற்பின்றி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் பள்ளியறையிலிருந்து சக்கரத்தாழ்வார் சன்னதியில் உத்ஸவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில்களில் பக்தர்களுக்கு சானிடைஸர் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிய அறிவுறுத்தினர்.கொங்கரத்தியில் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சிவகங்கை: சிவகங்கை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்கோயிலில் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலில் முக கவசம் அணிந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.