* எந்த சூழலில் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை மாற்றிக் கொள்.
* கோபம் கண்ணை மறைக்கும். அப்போது அறிவுக்கு வேலை கொடு. * தியானத்தில் ஈடுபடுபட்டால் அமைதியுடன் வாழலாம். * பக்தியை தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை. * பிறரிடம் உள்ள குற்றத்தையே சிந்தித்தால் குற்றவாளி ஆகி விடுவாய். * வாழ்வில் எந்தளவுக்கு பற்று குறைகிறதோ, அந்தளவுக்கு நிம்மதி கிடைக்கும். * மனதில் துாய்மை இருந்தால் பார்க்கும் காட்சியிலும் துாய்மை தெரியும். * ஆன்மிகத்தில் சாதனை படைக்க இளமைக்காலமே ஏற்றது. * நம்பிக்கையுடன் பாடுபட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும். * யாரையும், எந்த வேலையையும் துச்சமாக கருதக் கூடாது. * பிரச்னை அனைத்திற்கும் பணமே அடிப்படை காரணம். * பணம் மனதை சஞ்சலப்படுத்தி பாவம் செய்யத் துண்டுகிறது. * நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள். * துறவு மனப்பான்மை இல்லாவிட்டால் பணத்தின் மீதுள்ள மயக்கம் தீராது. * மனதை துாய்மைபடுத்தும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு உண்டு. * கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.