ஒருநாள் அதிகாலையில் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை சந்திக்க ராணுவ தளபதிகள் வந்தனர். அப்போது யாருடனோ அவர் பேசுவது போலிருந்தது. விசாரித்த போது, ‘‘ நான் சிறுவயதில் மரம்வெட்டியாக பிழைப்பு நடத்தினேன். ‘தினமும் அதிகாலையில் ஆண்டவருடன் ஆலோசிக்காமல் மனிதர்கள் யாரிடமும் பேசாதே’ என என் பாட்டி அறிவுரை கூறினார். அன்று முதல் அதிகாலையில் எழுந்ததும் வழிபாட்டை முதல் கடமையாக கொண்டேன். விறகு வெட்டிக் கொண்டிருந்த என்னை நாட்டை ஆட்சி புரியும் விதத்தில் உயரச் செய்தார்’’ எனத் தெரிவித்தார்.