திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணங்குடி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தாமோதர நாராயணப் பெருமாளுக்கு திருநீறணி விழா என்று ஒன்று உண்டு. அன்று ஆலயத்திற்கு வரும் அனைத்து வைணவர்களும் திருநீறு பூசிக் கொள்வார்கள். இது மூன்றரை நாழிகைகள் மட்டுமே நடைபெறும். உபரிசரவசு என்னும் மன்னனுக்காக நடத்தப்படும் இவ்விழாவின்போது பெருமாள் தியாகராஜர் வேடம் தரிக்கிறார்.