* குறிக்கோள் நோக்கி விரைந்தோடு. உலகமே உன் காலடியில்! * உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெற நீ வந்திருக்கிறாய். * ஒவ்வொரு மனிதனும் சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். * உன்னிடம் உள்ள மிருக சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்று. * ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்; அதில் மனதை ஒருமுகப்படுத்து. * உறுதியுடன் போராடினால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகும். * உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நீ தான் உனக்கு நீதிபதி. * கத்தி முனையில் நடப்பது போல வாழ்வு கடினமானது. நம்பிக்கை இழக்காதே. * எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராமல் பாடுபாடு. * உழைப்பு இன்றி செயல் நிறைவேறாது. உழைப்பு ஒன்றே உயர்த்தும். * ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள். * சுயநலத்தை மறந்தவன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான். * தலைவனாக இருப்பதை விட சேவகனாக இருந்து தொண்டாற்றுவது மேல். * தியாகம் செய்ய தயாராக இருந்தால் மற்றவர் இதயத்தை வெல்லலாம். * எல்லாத் தீமைகளையும் எதிர்த்து போராடு. அனைவரிடமும் அன்பு காட்டு. * சில நேரங்களில் இன்பத்தை விடத் துன்பமே சிறந்த ஆசிரியராக உள்ளது. * பசியால் வாடுவோரிடம் ஆன்மிகம் பேசுவது அவமதிப்பான செயல். * உயிர் போகும் வரை கடமையில் இருந்து விலக வேண்டாம். * தீய ஆசைகளில் சிக்கினால் அற்ப புழு போல இறக்க நேரிடும். * பண்புள்ளனாக வாழ கற்றுக்கொள். பின்னர் பிறரை பண்புள்ளவனாக மாற்று. * உனக்குள் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது. அதை வெளிக்கொண்டு வா.