* அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று. * கடவுளை அடைய பக்தி ஒன்றே சிறந்த வழி. * நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய். * தவறுகளை ஏற்றுக் கொண்டு உன்னை நீயே திருத்து. * பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் தான் இருக்கிறது. * எந்த சூழ்நிலையிலும் மனஅமைதியை இழக்காதே. . * கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி. * உன் உள்ளத்தில் கடவுள் குடி கொண்டிருக்கிறார். * அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும். * எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அர்ப்பணிப்புடன் செய். * இன்பம், துன்பம், புகழ், இகழ் இரண்டையும் சமமாக கருது. * குறிக்கோளை அடைவது யாருக்கும் எளிதானது அல்ல. * எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு. * கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம். * தீயவர்களிடமும் நன்மை இருக்கலாம். ஒழுக்க சீலர்களிடமும் தீமை இருக்கலாம். * எண்ணம், சொல், செயலில் நேர்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும்.