இறைவன் நமக்கு அளித்த பரிசு குடும்பம். ஆனால் உலகில் பலர் பெற்றோர் இன்றி அனாதையாக வாழ்கின்றனர். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். பெற்றோரின் அருமையை ஆதரவற்ற குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பார்த்தால் புரியும். நம்மிடம் உள்ளதை அவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும். பணம், பொருள் இல்லாவிட்டால் அவர்களுடன் நேரத்தையாவது செலவழிக்கலாம். பிறந்த நாள், கல்யாண நாள் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடுவதை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாட முயற்சிக்கலாம். ‘‘அநாதைகள், ஏழைகளுக்கு செய்யும் நன்மைக்கான கூலி மறுமை நாளில் கிடைக்கும். அநாதைகளின் சொத்து, பொருட்களை பாதுகாக்க நேர்ந்தால் அவர்கள் பருவம் அடைந்த பின் குறைவின்றி கொடுங்கள்’’ என்கிறார் நாயகம்.