இறைவனின் கட்டளைப்படியே உலகில் எல்லாம் நடக்கிறது. அவனது விருப்பம் ஒன்று, உலகம் செயல்படும் விதம் வேறொன்று என்ற நிலை எப்போதும் கிடையாது. நன்மைக்கும், தீமைக்கும், ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உண்டான நியதிகள் எல்லாம் ஆதிகாலத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நல்லவர்களின் வாழ்வில் குறுக்கிடும் துன்பங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எல்லாம் இறைவனின் கட்டளைப்படியே ஏற்படுகிறது என்ற உண்மையை உணர்ந்தால் மனதில் அமைதி நிலவும்.