ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி பிரமோற்சவ தேர்த்திருவிழா கடந்த, 20ல் தொடங்கி நடந்து வருகிறது. இன்றிரவு விழா மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதர் உற்சவருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக கோவிலின் ராஜகோபுரத்தின் இடது பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர், கடந்த வாரம் வெளியில் கொண்டு வரப்பட்டது. புதுப்பிக்கும் பணி நடந்த நிலையில், கூடாரம் அமைத்தல், குடை மற்றும் கலசம் வைத்தல் பணியும் நடந்து, தேரோட்டத்துக்கு தயாராக உள்ளது.