சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி.,
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2020 04:09
சென்னை: சபரிமலைக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்ற போது தன்னை டோலியில் தூக்கிச் சென்றவர்களின் காலை தொட்டு வணங்கிய வீடியோ வரைலாகி வருகிறது.
மறைந்த பிரபல பாடகர் பன்முகத்தன்மை கொண்டவர் அது மட்டுமல்லாது சபரிமலை கோவிலுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர் சபரிமலைக்கு செல்லும் போதெல்லாம் டோலியில் பயணிப்பது வழக்கம். அவ்வாறு அவர் டோலியில் பயணிக்கும் முன்பாக டோலி தூக்குவோரின் கால்களை தொட்டு வணங்கிய பின்னரே டோலியில் அமர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் வீிடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. பெரியோர்களுக்கும் இறைவனுக்கு சேவை செய்வோருக்கும் மரியாதை தரும் வழக்கம் இந்தகால இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பெரிய பாடகராக இருந்தும் சாதாரண டோலி தூக்குவோரின் கால்களை கூட எஸ்.பி.பி., தொட்டு வணங்குவது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடம்.