Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை ... புனித ஜெபமாலை சர்ச்சில் கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் டெண்டர் நடத்தலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
04:09

மதுரை : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஹவுஸ் கீப்பிங் பணிக்கு டெண்டர் விடுவதை ரத்து செய்து, கோயிலுக்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தடை விதித்தது.

சென்னை மயிலாப்பூர் ரமேஷ் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வளாகம் மற்றும் அதன் உபகோயில்கள், சார்பு நிறுவனங்களை பராமரிக்க (ஹவுஸ் கீப்பிங்) ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த டெண்டர் அறிவிப்பை, கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் ஆக.,20 ல் வெளியிட்டார். பக்தர்கள் தன்னார்வத்தில் உழவாரப் பணியில் ஈடுபடுகின்றனர். ஹவுஸ் கீப்பிங் பணி பக்தர்களின் உரிமையை பாதிக்கிறது. செயல் அலுவலரே தக்காராக தொடர்வதால், அவர் இம்முடிவு மேற்கொள்ள முடியாது. டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார். தனிநீதிபதி, கொள்கை மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை அறங்காவலர் குழுதான் மேற்கொள்ள முடியும். தக்கார் டெண்டர் அறிவிப்பு வெளியிட முடியாது. அதை ரத்து செய்கிறேன். பழநி கோயிலுக்கு அறங்காவலர் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும், என உத்தரவிட்டார். இதை எதிர்த்து பழநி கோயில் செயல் அலுவலர், டெண்டரால் பாதிக்கப்பட்ட நபராக இருந்தால் வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளது. மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை. அனைத்து நாட்களிலும் தன்னார்வலர்கள் உழவாரப் பணியில் ஈடுபட வாய்ப்பில்லை. அறங்காவலர் குழுவை ஏற்படுத்தும் வரை, அதற்குரிய பணியை தக்கார் மேற்கொள்ளலாம். தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும், என மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. டெண்டர் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கமிஷனர், செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar