பதிவு செய்த நாள்
02
அக்
2020
05:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வராகி அம்மன் கோவிலில் இவ்வுலகை விட்டு கொரோனா தொற்று விலக கடந்த, 68 நாட்களாக யாகபூஜை நடந்தது. நேற்று சிறப்பு பூஜைகளுடன் யாகம் நிறைவுற்றது.
உலக மக்களின் நலன் வேண்டியும், கொரோனா என்னும் கொடிய நோய் இவ்வுலகை விட்டு அகல வேண்டும் எனவும், வராகி அம்மன் மற்றும் காலபைரவருக்கு கடந்த, 68 நாட்களாக தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள், சகஸ்ரநாம பாராயணம் பூஜை, அஸ்வ பூஜைகள் நடந்தன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், 72 வகையான அபிஷேக பொருள்களுடன் வராகி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்கா தேவி, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மாலையில் வராகி ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, வராகி அம்மன், காலபைரவர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில், பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.