திருக்கனுார் : செட்டிப்பட்டு வரதராஜபெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, அன்று காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை மற்றும் நெய் வேத்தியம் நடந்தது. இதில் செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.