புதுச்சத்திரம் : பெரியப்பட்டு பாண்டுரங்க பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஸ்ரீரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத உற்சவம் நடப்பது வழக்கம். அதையொட்டி நேற்று காலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8.00 மணிக்கு திருவாராதனம், திருப்பாவை சாற்றுமுறை நடந்தது. காலை 9.00 மணிக்கு லட்சார்ச்சனை, லட்சுமி சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. 3.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. இரவு 8.00 மணிக்கு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.