பதிவு செய்த நாள்
05
அக்
2020
01:10
வாழப்பாடி: ஓம்சக்தி முருகன் சித்தர் பீடம் மடாதிபதி, உலக நன்மைக்கு, தொடர் உண்ணாவிரத பூஜையை தொடங்கியுள்ளார். வாழப்பாடி அருகே, வேப்பிலைக்குட்டையில், 5 ஏக்கரில், ஓம்சக்தி முருகன் சித்தர் பீடம், கோவில் உள்ளது. அதன் மடாதிபதி ஓம்சக்தி முருகன் சித்தர், 55. அவர், கொரோனா பரவல் நீங்கி, மக்கள் நலமுடன் வாழ, உலக நன்மை வேண்டி, தொடர் உண்ணாவிரத பூஜையை, நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளார். காலை முதல் இரவு வரை, இரு வேளை உணவை தவிர்த்து, ஓம்சக்தி அம்மனுக்கு, நித்திய பூஜை நடத்துகிறார். கொரோனா முடிவுக்கு வரும் வரை, இரவில் மட்டும் ஒரு வேளை உணவு எடுத்துக்கொண்டு, தொடர் விரத பூஜையை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.