ஒரு புதுமணத் தம்பதியர் கைகோர்த்தபடி ஊருக்கு வெளியே நடந்தனர். அறுவடை முடிந்த வயல் அங்கிருந்தது. அதைக் கண்ட மணமகள், ‘‘எவ்வளவு அழகாக கத்தரிக்கோலால் அறுத்திருக்கிறார்கள்’’ என்றாள். அதற்கு மாப்பிள்ளை, ‘‘கத்தரிக்கோலால் அல்ல...அரிவாளால் அறுத்தால் தான் இப்படி இருக்கும்’’ என்றான். அவள் மீண்டும், ‘‘ கத்தரிக்கோலால் மட்டுமே இப்படி ஒழுங்காக வெட்ட முடியும்’’ என்றாள் வேகமாக. வாக்குவாதம் செய்தபடியே வயலைத் தாண்டி ஆற்றுப்பாலத்தில் நடந்தனர். அங்கு இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே மணப்பெண் தவறி ஆற்றுக்குள் விழுந்தாள். விட்டுக் கொடுக்காதவருக்கு நேரும் கதி இதுதான். கணவன், மனைவி தங்களுக்குள் விட்டுக் கொடுத்தால் மட்டுமே திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் செழிக்கும்.