வாழ்வில் முன்னேற விரும்பினால் மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் தன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக பேச வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். யாரும் விமர்சித்தால்ல் பொறுமை இன்றி கூச்சலிடுகின்றனர். நடுநிலையாளர் விமர்சனத்தைக் கூட பொருட்படுத்துவதில்லை. மற்றவர் சொல்லும் நல்லதை ஏற்கும் பக்குவம் முதலில் வேண்டும். காலத்திற்கேற்ப மாறவும், புதிய விஷயங்களில் ஈடுபடும் ஆர்வமும் வளர்ச்சிக்கு தேவையானவை. தத்துவ ஞானி சாக்ரடீஸ், ‘‘நான் அறிந்தது கொஞ்சமே, இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்’’ என்றார். இந்த மனப்பான்மை கொண்டவர்கள் தான் முன்னேறுவதோடு, சார்ந்தவர்களையும் முன்னேற்றம் காணச் செய்வர்.