வானுயர பாறையில் இருந்து பள்ளத்தில் விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே வேதனை. ஆனால் உயர்ந்த பிறவியான மனிதன் பாவம் எனும் பள்ளத்தில் விழுந்தால் மொத்த வாழ்வும் வேதனையே. பாவம் என்னும் கல்லறைக்கு பலவழி. தர்மதேவன் ஆலயத்துக்கு செல்ல ஒழுக்கமே பாதையாகும். தவறு செய்தவர்கள் வாழ்நாள் எல்லாம் வேதனை அனுபவிப்பதை கண்கூடாக காணலாம். ஒழுக்கத்தில் இருந்து விலகாமல் நம்மை தாங்கிப் பிடிக்கும் கைகள் ஆண்டவருடையது. மனம் சறுக்கும் போது அவரது கருணை காக்கும்.