ஜீவேச பேத குண பூர்த்தி ஜகத்ஸீஸத்வ நீசோச்ச பாவமுக நக்ரணை ஸமேதா துர்வாத்யஜா பதிகிலைர் குரு ராகவேந்த்ர வாக் தேவதா ஸரிதமும் விமலீ கரோது.
ஏற்றத்தாழ்வற்ற படைப்பினில், புல் மேயும் சிறு ஆடுமுதல், அகண்ட நீர்நிலையில் வாழும் முதலை, பெரும் யானை என்ற ஜீவ இடைவெளி பேதமில்லா பொது உயிர் பாவிப்பதுபோல், த்வைத மத சித்தாந்தங்களையும் ஸ்தாபனித்து விகசிக்கச் செய்கின்றது. இந்த ஸ்தோத்திரம் விண்ணவர் போற்றும் விண்ணுலக கங்கை போன்று பரிசுத்தமானது. அந்த கங்கை போன்ற புண்ணியமான ராகவேந்திரரின் வாக்கு என்னை (நம்மை) பரிசுத்தமாகும்.