சிவபெருமானுக்கு பூஜைசெய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களை பயன்படுத்தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படுகின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்பதில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டுமென்பதில்லை. நமசிவாய என அவர் திருநாமத்தைஉச்சரித்து, மனப்பூர்வமாக வழிபட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கும் பலன் கிடைத்து விடும்.