சிவாலயங்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் பைரவர். சம்பாசுரனின் கொடுமையால், தேவர்கள் அல்லலுற்றபோது, நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக பின்தொடர சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். சூலத்தால்அசுரனின் மார்பைப் பிளந்து கொன்றார். பைரவர் என்னும் பெயரை வயிரவர் என்றும் குறிப்பிடுவர். கருப்பு ஆடை உடுத்தும் இவர், காசி நகரைக் காவல் செய்வதாக காசிப்புராணம் கூறுகிறது. இவருக்குரிய கருப்புக்கயிறை (காசிக்கயிறு) ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் பாதுகாப்புக்காக கட்டிக் கொள்வர். இதனால் எதிரிபயம், திருஷ்டி தோஷம் நீங்குவதாகச் சொல்வர். ஆவேச மூர்த்தியான இவர், மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த கோலத்தில் கால சம்ஹார மூர்த்தி என்றும் பெயருடன் திருக்கடையூரில் அருள் பாலிக்கிறார்.