பதிவு செய்த நாள்
10
அக்
2020
09:10
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று, பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
காரமடையில் அரங்கநாதர் கோவில் புரட்டாசி மாத 4ம் சனிக்கிழயில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள், தாசர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கபடாதததால் சாலையில் திரண்டு வழிபாடு செய்தனர். புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். பொகலூர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், உற்சவ மூர்த்திகள், கருட வாகனத்தில் எழுந்தருளி, திருக்கோயில் வளாகத்தில் கருட சேவையும், மூலவர் தீபாராதனையும் நடக்கிறது. தாசர்களுக்கு, அரிசி படி சமர்ப்பிப்பது, கவாலம், அன்னதானம் ஆகியவை நடக்கிறது. பொங்கலூர், வரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி பெருமாள் கோவில், குன்னத்தூர்புதூர் பெருமாள் கோயில் ஆகியவற்றில், இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.